நவராத்திரிவிழா-2015
13-10-2015 புரட்டாசி25 ம்நாள் செவ்வாய்கிழமைநவராத்திரிவிழா ஆரம்பமாகியது தொடர்ந்து ஒன்பது தினங்கள் இடம்பெறும். தினமும் காலை 9.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேடபூஜை,வசந்தமண்டபபூஜை என்பன இடம்பெறும்.
13-10-2015 புரட்டாசி25 ம்நாள் செவ்வாய்கிழமைநவராத்திரிவிழா ஆரம்பமாகியது தொடர்ந்து ஒன்பது தினங்கள் இடம்பெறும். தினமும் காலை 9.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேடபூஜை,வசந்தமண்டபபூஜை என்பன இடம்பெறும்.
27-02-2016 வெளியிடப்பட்டசெய்தி அம்பாள ஆலய வாசலின் தெற்கு பக்கமதில் வேலைகள் தை மாதம் அத்திபாரமிடப்பட்டு வேலைகள் நடைபெற்றுவருகின்றது இவ் மதிலும் வடக்கு பக்கமாக அமைக்கபட்டுவரும் மதில் போலவே சிற்பவரிவேலைப்பாடுடையதாக அமைக்கப்படவுள்ளது . இத்திருப்பணிக்கு அடியவர்கள் நிதி, கட்டிட பொருட்கள் [சீமெந்து ,கருங்கல்சல்லி மணல் ,கம்பி ] ஆகியவற்றைக் வழங்க விரும்பினால் ஆலய அலுவலகத்தில் மட்டும் செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
5ம் பங்குனித்திங்கள் விழா மிக சிறப்பாக இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாளை வழிபடுவதற்காக ஆலயத்தில் கூடியிருந்தனர் புனிததீர்த்தத்தில் நீராடி பொங்கலிட்டு படைத்து அம்பாளை மனமுருகி வேண்டி வழிபட்டு சென்றனர் . திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.
4ம் பங்குனித்திங்கள் பொங்கல் விழா நேற்றையதினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் அம்பாளை தரிசிப்பதற்காக ஆலயவளாகத்திலேகூடி பொங்கலிட்டும் நேர்த்திகளை நிறைவேற்றியும் அம்பாளை வழிபட்டு சென்றனர் .அடியவர்களின் தாக சாந்தியை தீர்க்கும்முகமாக ஆலய சுற்றாடலிலும் வரும்வீதி களிலும் பத்துக்கு மேற்பட்ட தாக சாந்தி நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன் ஆலயத்தின் கிழக்கு,தெற்கு ,மேற்கு பக்கங்களில் உள்ள அன்னதான மடங்களில் அன்னதானமும் வழங்கபட்டது ….
3ம் பங்குனித்திங்கள் விழா நேற்று வெகுசிறப்பாக இடம்பெற்றது. குடாநாட்டின் பலபகுதிகளில் இருந்தும் வருகைதந்த பக்தர்கள் அம்பாளுக்கு பொங்கலிட்டும் கரற்பூரசட்டி ,காவடி எடுத்தும், அர்சனைசெயதும் ,அங்கபிரதிஷ்டை செய்தும் வழிபட்டுசென்றதை காணமுடிந்தது. ஆலயத்தின் நான்குபுறங்களிலும் பல நூற்றுக்கணக்கானபொங்கல்கள் அதிகாலை முதலே இடம்பெற்றுவந்ததை அவதானிக்க முடிந்தது. திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.
‘கண்ணகாம்பிகை அன்னசத்திரம்‘ மண்டப திறப்புவிழா வைபவரீதியாக 30-03-2015 திங்கள்கிழமை முற்பகல்11.00மணியளவில் தர்மகர்த்தா தலைமையில் இடம்பெற்றது. பிரதமவிருந்தினராககலந்துகொண்ட ரூபினிவரதலிங்கம் (மேலதிகஅரசஅதிபர் ),சிறப்பு விருந்தினர் பொ.சந்திரசேகரம் (விரிவுரையாளர் யாழ் பல்கலைகழகம் )ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டு நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்துவைக்கபட்டது . படத்தின்மேல் ‘கிளிக்’ செய்வதன் மூலம் முழு அளவில் பார்வையிடமுடியும் . முந்திய செய்தி அம்பாள் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த ‘கண்ணகாம்பிகை அன்னசத்திரம்‘ மண்டபம் வைபவரீதியாக 30-03-2015 …
2ம் பங்குனித்திங்கள்விழா சிறப்பாக இடம்பெற்றது குடாநாட்டின் பலபாகங்களிலிருந்தும் வருகைதந்த பக்தர்கள் புனிததீர்த்தத்தில் நீராடி பொங்கலிட்டு வழிபட்டுசென்றனர். அதிகாலை 4.00 மணிமுதலே பக்தர்கள் வருகைதந்தவண்ணம் இருந்ததை காணமுடிந்தது . பகல்திருவிழா அம்பாள் இடபவாகனத்திலும் மாலை திருவிழா மகரவாகனத்திலும் எழுந்தருளி அருட்காட்சியளித்தார் .
வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் பெருவிழா 16-௦3-2015 அன்று ஆரம்பமாகிறது. பங்குனித்திங்கள் என்றதும் இலங்கை வாழ் சைவமக்கள் மனதில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலும் அங்கு இடம்பெறும் பெருமளவான பொங்கலும் தான் நினைவிட்குவரும் என்று கூறுவார்கள் .இத்தகைய சிறப்புமிக்க அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் காலத்தில் பக்தர்கள் சர்வரோக நிவாரணியாக விளங்கும் புனித தீர்த்தத்தில் நீராடி பூஜை,அபிஷேக ஆராதனைகளினை வழிபட்டும்,பொங்கலிட்டும் அவற்றினை…
வரலாற்று சிறப்பு மிக்க மட்டுவில் பன்றித்தலைச்சிஅம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஜய வருஷம் மார்கழி மாதம் 12 ம் நாள் 27-12-2014 சனிக்கிழமைகொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் இடம்பெறுகிறது மார்கழி மாதம் 20ம் நாள் 04-01-2015 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் மார்கழி 21 ம் நாள் திருவாதிரை 05-01-2015 திங்கள்கிழமை அன்று தீர்த்தம் இடம்பெற்று மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடைகிறது ….
யாழ்பாணத்தின் பிரசித்தி பெற்ற பொங்கல்தலமாக விளங்குகின்ற அம்பாள் ஆலயத்தில் தனவந்தர்களாலும், தருமகொடையாளர்களாலும் அன்னதானமண்டபங்களும் நீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டு தாகசாந்தி நிலையங்களாக செயட்பட்டு வந்தமை யாவரும் அறிந்ததே அவை 2000 ம்ஆண்டு இடம்பெற்ற யுத்தனர்த்தம் காரணமாக சேதமடைந்தும் ,முற்றாக அழிவடைந்தும் போயுள்ளது தற்போது ஒரு சில மண்டபங்களே இயங்கி வருகிறது எனினும் அவை போதுமானதாக காணப்படவில்லை.எனவே அக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு புதிய அன்னதான…
S | M | T | W | T | F | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 |