நிர்வாகம்

யாழ் குடாநாட்டில் தென்மராட்சிப்பகுதியில் வீற்றிருந்து சர்வலோகமும் தன்அருளை வழங்கிக் கொண்டிருக்கும் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயம் தொடர்பான  விடயங்களை ஆலய நிர்வாகம் இவ் இணையத்தளம் ஊடாக உலகமெல்லாம் பரந்து வாழும் அம்பாள் அடியவர்களுக்கு அறியப்படுத்துகிறது.

இவ் இணையத்தளம் ஊடாக அடியார்கள் அம்பாள் ஆலயத்தி்ன் வரலாறு பூஜைகள் உற்சவங்கள் திருப்பணிகள் என்பவற்றை அறியமுடியும் இத்தளம் நிர்வாகத்தி்ன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றது.

  • ஆலயத்தில் உற்சவங்களும், திருப்பணிகளும் சிறப்பாக இடம்பெற்றுவருகி்ன்றன. அடியார்களாகிய தாங்கள் அம்பாளி்ன் திருப்பணி கைங்கரியங்களுக்காகவோ, உற்சவங்களுக்காகவோ நிதி, பொருள் ஆகியவற்றைக் கையளிக்க விரும்பினால் ஆலய அலுவலகத்தில் செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை. DSC07357


பங்குனித்திங்கள் பொங்கல் – 2024

வரலாற்று சிறப்புமிக்க பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலய வருடாந்த பங்குனித்திங்கள் பொங்கல் இவ்வருடம் 18-03-2024,25-03-2024,01-4-2024,08-04-2024ஆகிய நான்கு திங்கள்கிழமைகளில் இடம்பெறவுள்ளது .

எனினும் அம்பாள் ஆலயம் கடந்த 11-09-2023 திங்கள்கிழமை அன்று பாலஸ்த்தாபனம் நிகழப்பெற்று ஆலய அபிஷேகமண்டபம், தம்பமண்டபம், வசந்தமண்டபம் உள்ளிட்ட திருப்பணிவேலைகள் நடைபெற்று வருகிறது.

எனவே இக்காலப்பகுதியில் திருவிழா(திருவீதியுலா) இடம்பெறமாட்ட்து, ஆயினும் பங்குனித்திங்கள் கிழமைகளில் பூசைவழிபாடுகள் அதிகாலை 5.00மணிக்கு உஷத்காலப் பூசையுடன் ஆரம்பமாகி காலை,மாலை அபிஷேகம் விஷேடபூசை, பொங்கல் படையல், அர்ச்சனை என்பன வழமைபோன்று இடம்பெற்று இரவு 9.00 மணிக்கு அர்த்தசாமப்பூசையுடன் பங்குனித்திங்கள் பொங்கல் வழிபாடுகள்நிறைவு பெறும் .

பக்தர்கள் புனித தீர்த்தக்கேணியில் நீராடி விரதமிருந்து பொங்கல், படையல், அர்ச்சனை உள்ளிட்ட தமது நேர்த்திகள், வழிபாடுகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

ஆலயத்தின் பெயரால் திருப்பணி / பூசை என எந்தவோரு நிதி, பொருள் சேகரிப்பிற்கும் உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ எவருக்கும் அனுமதிவழங்கபடவில்லை.

அன்னையின் ஆலய திருப்பணிவேலைகளுக்கு பங்களிப்பு செய்ய விரும்புவோர் நேரடியாக ஆலய அலுவலகத்தில் /ஆலய திருப்பணி உண்டியலில் மட்டுமே வழங்கமுடியும்.

தர்மகர்த்தா
தொலைபேசி இலக்ககம் : 0213735259

 

சார்வரி வருஷ விசேட உற்சவங்கள் 2020-2021

அறிவித்தல்


தென்மராட்சி பிரதேச செயலகத்தில் 18.03.2020 புதன்கிழமை இடம்பெற்ற விசேட கூட்டத் தீர்மானத்தின் படி நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக பங்குனித் திங்கள் உற்சவத்தில் பக்தர்கள் வருகை தருவது.நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுதல் என்பவற்றை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.தமது அனுஷ்டானங்களை வீட்டிலிருந்தவாறே கடைப்பிடிக்குமாறு கோருகின்றோம்.எனவே பக்தர்கள் நோய்த் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்வதுடன் விரைவில் உலகமக்கள் அனைவருக்கும் நோய்த் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டு வழமையான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டுமென அம்பாளை பிரார்த்திக்கின்றோம்.
சிவ-பஞ்சாட்சரம்
தர்மகர்த்தா
பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் கோவில்,
மட்டுவில் வடக்கு,
சாவகச்சேரி.

மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன்-தேர்த்திருவிழா

மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன்

Posted by மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் on Tuesday, 14 January 2020

வருடாந்த மஹோற்சவம்-2020

மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம் விகாரிவருஷம் ,மார்கழி 16ம் நாள் புதன்கிழமை[01-01-2020] கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துநாட்கள் இடம்பெற்று மார்கழி திருவாதிரை க்கு தீர்த்தத்திருவிழாவும் ,மாலை கொடியிறக்கத்துடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

நவராத்திரிவிழா-2019

29-09-2019 புரட்டாசி 12ம்நாள் ஞாயிற்றுக்கிழமை நவராத்திரிவிழா ஆரம்பம்.

தினமும் காலை 9.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேடபூஜை,வசந்தமண்டபபூஜை என்பன இடம்பெறும்………….

2ம் பங்குனி திங்கள்-காலை


2ம் பங்குனி திங்கள் சோடிசிங்கவாகனகாட்சி-2019(வீடியோ)

1ம் பங்குனி திங்கள்


1ம் பங்குனி திங்கள் இடபவாகனகாட்சி-2019(வீடியோ)

அன்னவாகன காட்சி


அன்னவாகன காட்சி(புகைப்பட வீடியோ)

?>