3ம் பங்குனித்திங்கள் விழா
3ம் பங்குனித்திங்கள் விழா நேற்று வெகுசிறப்பாக இடம்பெற்றது. குடாநாட்டின் பலபகுதிகளில் இருந்தும் வருகைதந்த பக்தர்கள் அம்பாளுக்கு பொங்கலிட்டும் கரற்பூரசட்டி ,காவடி எடுத்தும், அர்சனைசெயதும் ,அங்கபிரதிஷ்டை செய்தும் வழிபட்டுசென்றதை காணமுடிந்தது. ஆலயத்தின் நான்குபுறங்களிலும் பல நூற்றுக்கணக்கானபொங்கல்கள் அதிகாலை முதலே இடம்பெற்றுவந்ததை அவதானிக்க முடிந்தது.