திருப்பணி -முன்பக்க மதில்

  1. 27-02-2016  வெளியிடப்பட்டசெய்தி  அம்பாள ஆலய வாசலின் தெற்கு  பக்கமதில் வேலைகள் தை மாதம் அத்திபாரமிடப்பட்டு  வேலைகள் நடைபெற்றுவருகின்றது இவ் மதிலும் வடக்கு பக்கமாக அமைக்கபட்டுவரும் மதில் போலவே  சிற்பவரிவேலைப்பாடுடையதாக அமைக்கப்படவுள்ளது .    இத்திருப்பணிக்கு அடியவர்கள்  நிதி, கட்டிட பொருட்கள் [சீமெந்து ,கருங்கல்சல்லி மணல் ,கம்பி ] ஆகியவற்றைக் வழங்க  விரும்பினால் ஆலய அலுவலகத்தில் மட்டும்  செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
    Continue reading “திருப்பணி -முன்பக்க மதில்”

கண்ணகாம்பிகை அன்னசத்திரம் திறப்பு விழா

‘கண்ணகாம்பிகை அன்னசத்திரம்‘  மண்டப திறப்புவிழா  வைபவரீதியாக 30-03-2015  திங்கள்கிழமை முற்பகல்11.00மணியளவில் தர்மகர்த்தா தலைமையில் இடம்பெற்றது. பிரதமவிருந்தினராககலந்துகொண்ட ரூபினிவரதலிங்கம் (மேலதிகஅரசஅதிபர் ),சிறப்பு விருந்தினர் பொ.சந்திரசேகரம் (விரிவுரையாளர்  யாழ் பல்கலைகழகம் )ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டு நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்துவைக்கபட்டது .

DSC05508

படத்தின்மேல் ‘கிளிக்’ செய்வதன் மூலம் முழு அளவில் பார்வையிடமுடியும் .

முந்திய  செய்தி

அம்பாள் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த ‘கண்ணகாம்பிகை அன்னசத்திரம்‘  மண்டபம் வைபவரீதியாக 30-03-2015  திங்கள்கிழமை முற்பகல்11.00மணிக்கு திறந்து வைக்கபட்டுநினைவுக் கல்லும் திரைநீக்கம்செய்துவைக்கபடுகிறது.

இம்மண்டபம் அமரர். வைரமுத்து இராசசிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக  துணைவியார்   திருமதி -அன்னலட்சுமி இராசசிங்கம் அவர்களால் அமைக்கப்பட்டது.

 

ஜய வருஷ பங்குனித்திங்கள் உத்சவம் 2015

வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் பெருவிழா 16-௦3-2015 அன்று ஆரம்பமாகிறது. பங்குனித்திங்கள் என்றதும் இலங்கை வாழ் சைவமக்கள் மனதில் பன்றித்தலைச்சி  அம்மன் கோவிலும் அங்கு இடம்பெறும் பெருமளவான பொங்கலும் தான் நினைவிட்குவரும் என்று கூறுவார்கள் .இத்தகைய சிறப்புமிக்க அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் காலத்தில்  பக்தர்கள் சர்வரோக நிவாரணியாக விளங்கும் புனித தீர்த்தத்தில் நீராடி பூஜை,அபிஷேக ஆராதனைகளினை வழிபட்டும்,பொங்கலிட்டும் அவற்றினை தாமே அம்பாளுக்கு படையலிட்டு வழிபட்டும் ,கற்பூரச்சட்டி ,கண்பானை, பாற்செம்பு, காவடி எடுத்தும்,அங்கபிரதட்ஷனம் செய்தும்,விரதமிருந்தும் தமது நேர்த்திகளை பரிபூரணமாக நிறைவேற்றி அம்பாளை வேண்டி வழிபட்டு செல்வர் . இவ்வாறானதொரு நீண்ட வழிபாட்டு பாரம்பரியம் கொண்ட அம்பாள் ஆலயத்தில் ஜய வருஷ பங்குனித்திங்கள் உற்சவம் பின்வரும் தினங்களில் இடம்பெறவுள்ளது.

பங்குனி2  [16.03.2015] முதலாம் பங்குனித்திங்கள்

பங்குனி9  [23.03.2015 ]இரண்டாம் பங்குனித்திங்கள்

பங்குனி16 [30.03.2015]மூன்றாம் பங்குனித்திங்கள்

பங்குனி23 [06.04.2015]நான்காம் பங்குனித்திங்கள்

பங்குனி30 [13.04.2015] ஐந்தாம் பங்குனித்திங்கள்

பங்குனித்திங்கள் உற்சவமானது ஆறுகால பூஜைகளுடன் காலை, மாலை அபிஷேகம் அம்பாள் திருவீதியுலா என்பனவற்றுடன் பக்தி பூர்வமாக இடம்பெறும். 

பக்தர்கள் காலை 5.00 மணிமுதல்  இரவு 8.00 மணிவரை பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் .

அம்பாள் ஆலயத்தில் பூஜைகளும் உற்ஷவங்களும் திருப்பணிகளும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.இதன்பொருட்டு நிதி,பொருள் சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.எனவே அடியவர்கள் ஆலய அலுவலகத்தில் மட்டும் கையளித்து பற்றுசீட்டினைப் பெற்றுக் கொள்ளும்படி கேட்டு கொள்கிறோம்.

1ம் பங்குனித்திங்கள் பொங்கல் விழா

வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் பெருவிழா 16-௦3-2015 அன்று  1ம் பங்குனித்திங்கள் விழா சிறப்பாக இடம்பெற்றது . அதிகாலை 4.00  மணிமுதலே பக்தர்கள் வருகைதந்து ஆலய தீர்த்தகேணியில் நீராடி அம்பாளை வழிபட்டும் பொங்கலிட்டு வழிபட்டு சென்றதை காண முடிந்தது.

  காலைத்திருவிழா  8.30  மணிக்கு அபிசேகத்துடன்  ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட பூஜை இடம்பெற்று அம்பாள் உள்வீதி ,இரண்டாம்வீதி வீதியுலாவந்து அருள்காட்சி வழங்கினார்.  

மாலை 5.30  மணிக்கு அபிசேகத்துடன்  ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட பூஜை இடம்பெற்று அம்பாள் உள்வீதி ,மூன்றாம் வீதி(வெளிவீதி ), வீதியுலாவந்து அருள்காட்சி வழங்கினார் .

தர்மகர்த்தா .