Archive for the ‘செய்திகள்’ Category

பங்குனித்திங்கள் பொங்கல் – 2024

வரலாற்று சிறப்புமிக்க பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலய வருடாந்த பங்குனித்திங்கள் பொங்கல் இவ்வருடம் 18-03-2024,25-03-2024,01-4-2024,08-04-2024ஆகிய நான்கு திங்கள்கிழமைகளில் இடம்பெறவுள்ளது .

எனினும் அம்பாள் ஆலயம் கடந்த 11-09-2023 திங்கள்கிழமை அன்று பாலஸ்த்தாபனம் நிகழப்பெற்று ஆலய அபிஷேகமண்டபம், தம்பமண்டபம், வசந்தமண்டபம் உள்ளிட்ட திருப்பணிவேலைகள் நடைபெற்று வருகிறது.

எனவே இக்காலப்பகுதியில் திருவிழா(திருவீதியுலா) இடம்பெறமாட்ட்து, ஆயினும் பங்குனித்திங்கள் கிழமைகளில் பூசைவழிபாடுகள் அதிகாலை 5.00மணிக்கு உஷத்காலப் பூசையுடன் ஆரம்பமாகி காலை,மாலை அபிஷேகம் விஷேடபூசை, பொங்கல் படையல், அர்ச்சனை என்பன வழமைபோன்று இடம்பெற்று இரவு 9.00 மணிக்கு அர்த்தசாமப்பூசையுடன் பங்குனித்திங்கள் பொங்கல் வழிபாடுகள்நிறைவு பெறும் .

பக்தர்கள் புனித தீர்த்தக்கேணியில் நீராடி விரதமிருந்து பொங்கல், படையல், அர்ச்சனை உள்ளிட்ட தமது நேர்த்திகள், வழிபாடுகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

ஆலயத்தின் பெயரால் திருப்பணி / பூசை என எந்தவோரு நிதி, பொருள் சேகரிப்பிற்கும் உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ எவருக்கும் அனுமதிவழங்கபடவில்லை.

அன்னையின் ஆலய திருப்பணிவேலைகளுக்கு பங்களிப்பு செய்ய விரும்புவோர் நேரடியாக ஆலய அலுவலகத்தில் /ஆலய திருப்பணி உண்டியலில் மட்டுமே வழங்கமுடியும்.

தர்மகர்த்தா
தொலைபேசி இலக்ககம் : 0213735259

 

சர்வாலயதீபம்

படத்தின் மேல் அழுத்துவதன் (கிளிக்) மூலம் சர்வாலயதீப உற்சவத்தின் புகைப்படங்களை(photos 10) பார்வையிடலாம்.சர்வாலயதீபம்-2018

துர்முகி வருஷ பங்குனித்திங்கள் உத்சவம் 2017

வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் பெருவிழா 20-௦3-2017 அன்று ஆரம்பமாகிறது. … Read the rest of this entry »

திருப்பணி -முன்பக்க மதில், மண்டபம் -2016

ஆலய மணிமண்டபத்தின் மிகுதி தெற்க்குபக்கம், மதில் என்பன அமைக்கப்பட்டு தற்போது பூச்சு வேலைகள் இடம்பெற்று வருகிறது.

இத்திருப்பணிக்கு அடியவர்கள்  நிதி, கட்டிட பொருட்கள் [சீமெந்து ,கருங்கல்சல்லி மணல் ,கம்பி ] ஆகியவற்றைக் வழங்க  விரும்பினால் ஆலய அலுவலகத்தில் மட்டும்  செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

முக்கிய குறிப்பு ;

உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை.

தர்மகர்த்தா .

Read the rest of this entry »

சர்வாலயதீபம் 25-11-2015

கார்த்திகை 9 புதன்கிழமை சர்வாலயதீப உத்சவம் இடம்பெற்றது மாலை5.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்துவிஷேட பூசை Read the rest of this entry »

கும்பாபிஷேகதின சங்காபிஷேக விழா -2015

25-10-2015 ஞாயிற்றுக்கிழமை ஜப்பசி 8ம் நாள் உத்திரட்டாதி நட்சத்திரம் அம்பாள் ஆலய கும்பாபிஷேகதினமாகும் . அன்றையதினம் காலை 108 கலஷசங்காபிஷேகம்  Read the rest of this entry »

நிர்வாகம்

யாழ் குடாநாட்டில் தென்மராட்சிப்பகுதியில் வீற்றிருந்து சர்வலோகமும் தன்அருளை வழங்கிக் கொண்டிருக்கும் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயம் தொடர்பான  விடயங்களை ஆலய நிர்வாகம் இவ் இணையத்தளம் ஊடாக உலகமெல்லாம் பரந்து வாழும் அம்பாள் அடியவர்களுக்கு அறியப்படுத்துகிறது.

இவ் இணையத்தளம் ஊடாக அடியார்கள் அம்பாள் ஆலயத்தி்ன் வரலாறு பூஜைகள் உற்சவங்கள் திருப்பணிகள் என்பவற்றை அறியமுடியும் இத்தளம் நிர்வாகத்தி்ன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றது.

  • ஆலயத்தில் உற்சவங்களும், திருப்பணிகளும் சிறப்பாக இடம்பெற்றுவருகி்ன்றன. அடியார்களாகிய தாங்கள் அம்பாளி்ன் திருப்பணி கைங்கரியங்களுக்காகவோ, உற்சவங்களுக்காகவோ நிதி, பொருள் ஆகியவற்றைக் கையளிக்க விரும்பினால் ஆலய அலுவலகத்தில் செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை. DSC07357


மணிமண்டபம் விரிவுபடுத்தல்

அம்பாள்  ஆலயமணிமண்டப  வேலைகள் கடந்தவருடம் ஆரம்பிக்கப்பட்டு ஒருபகுதி  வேலைகள் நிறைவடைந்துள்ளது. தற்பொழுது மண்டபத்தின் வடக்கு,தெற்குபக்கங்கள் 30அடி  நீளத்திற்கு மேலும்  விரிவுபடுத்தும் பணிகள் 26.o6.2013  புதன்கிழமை தெடக்கம் வேலைகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது   இத்திருப்பணிகளுக்கு அடியவர்கள் தங்களால் இயன்றளவு உதவிகளை (நிதி,கட்டடப்பொருட்கள்) வழங்கவிரும்பினால் அவற்றை ஆலய அலுவலகத்தில் வழங்கி பற்றுசீட்டினைப் பெற்றுகொள்ளவும்.

உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை.

DSC02903-300x225 Read the rest of this entry »

?>