Archive for the ‘அறிவித்தல்’ Category
பங்குனித்திங்கள் பொங்கல் – 2024
வரலாற்று சிறப்புமிக்க பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலய வருடாந்த பங்குனித்திங்கள் பொங்கல் இவ்வருடம் 18-03-2024,25-03-2024,01-4-2024,08-04-2024ஆகிய நான்கு திங்கள்கிழமைகளில் இடம்பெறவுள்ளது .
எனினும் அம்பாள் ஆலயம் கடந்த 11-09-2023 திங்கள்கிழமை அன்று பாலஸ்த்தாபனம் நிகழப்பெற்று ஆலய அபிஷேகமண்டபம், தம்பமண்டபம், வசந்தமண்டபம் உள்ளிட்ட திருப்பணிவேலைகள் நடைபெற்று வருகிறது.
எனவே இக்காலப்பகுதியில் திருவிழா(திருவீதியுலா) இடம்பெறமாட்ட்து, ஆயினும் பங்குனித்திங்கள் கிழமைகளில் பூசைவழிபாடுகள் அதிகாலை 5.00மணிக்கு உஷத்காலப் பூசையுடன் ஆரம்பமாகி காலை,மாலை அபிஷேகம் விஷேடபூசை, பொங்கல் படையல், அர்ச்சனை என்பன வழமைபோன்று இடம்பெற்று இரவு 9.00 மணிக்கு அர்த்தசாமப்பூசையுடன் பங்குனித்திங்கள் பொங்கல் வழிபாடுகள்நிறைவு பெறும் .
பக்தர்கள் புனித தீர்த்தக்கேணியில் நீராடி விரதமிருந்து பொங்கல், படையல், அர்ச்சனை உள்ளிட்ட தமது நேர்த்திகள், வழிபாடுகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
ஆலயத்தின் பெயரால் திருப்பணி / பூசை என எந்தவோரு நிதி, பொருள் சேகரிப்பிற்கும் உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ எவருக்கும் அனுமதிவழங்கபடவில்லை.
அன்னையின் ஆலய திருப்பணிவேலைகளுக்கு பங்களிப்பு செய்ய விரும்புவோர் நேரடியாக ஆலய அலுவலகத்தில் /ஆலய திருப்பணி உண்டியலில் மட்டுமே வழங்கமுடியும்.
தர்மகர்த்தா
தொலைபேசி இலக்ககம் : 0213735259
வருடாந்த மஹோற்சவம்-2020
மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம் விகாரிவருஷம் ,மார்கழி 16ம் நாள் புதன்கிழமை[01-01-2020] கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துநாட்கள் இடம்பெற்று மார்கழி திருவாதிரை க்கு தீர்த்தத்திருவிழாவும் ,மாலை கொடியிறக்கத்துடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.
மஹோற்சவம் -2018
அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் விளம்பிவருஷம் ,கார்த்திகை 28ம் நாள் வெள்ளிக்கிழமை [14-12-2018] கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துநாட்கள் இடம்பெற்று மார்கழி திருவாதிரை க்கு தீர்த்தத்திருவிழாவும் ,மாலை கொடியிறக்கத்துடன் நிறைவு பெறுகிறது . ……..
மஹோற்சவ விஞ்ஞாபனம் -2017
அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் துர்முகிவருஷம் ,மார்கழி 18ம் நாள் திங்கள்கிழமை [02-01-2017] கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துநாட்கள் இடம்பெற்று மார்கழி திருவாதிரை க்கு தீர்த்தத்திருவிழாவும் ,மாலை கொடியிறக்கத்துடன் நிறைவு பெறுகிறது . ……..
நவராத்திரிவிழா 2016
01-10-2016 புரட்டாசி 15ம்நாள் சனிக்கிழமை நவராத்திரிவிழா ஆரம்பம்.
தினமும் காலை 9.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேடபூஜை,வசந்தமண்டபபூஜை என்பன இடம்பெறும்………….
மன்மதவருஷ பங்குனித்திங்கள் உத்சவம் 2016
வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் பெருவிழா 14-௦3-2016 அன்று ஆரம்பமாகிறது. பங்குனித்திங்கள் என்றதும் இலங்கை வாழ் சைவமக்கள் மனதில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலும் அங்கு இடம்பெறும் பெருமளவான பொங்கலும் தான் நினைவிட்குவரும் என்று கூறுவார்கள் .இத்தகைய சிறப்புமிக்க அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் காலத்தில் பக்தர்கள் சர்வரோக நிவாரணியாக விளங்கும் புனித தீர்த்தத்தில் நீராடி பூஜை,அபிஷேக ஆராதனைகளினை வழிபட்டும்,பொங்கலிட்டும் அவற்றினை தாமே அம்பாளுக்கு படையலிட்டு வழிபட்டும் ,கற்பூரச்சட்டி ,கண்பானை, பாற்செம்பு, காவடி எடுத்தும்,அங்கபிரதட்ஷனம் செய்தும்,விரதமிருந்தும் தமது நேர்த்திகளை பரிபூரணமாக நிறைவேற்றி அம்பாளை வேண்டி வழிபட்டு செல்வர் . இவ்வாறானதொரு நீண்ட வழிபாட்டு பாரம்பரியம் கொண்ட அம்பாள் ஆலயத்தில் மன்மதவருஷ பங்குனித்திங்கள் உற்சவம் பின்வரும் தினங்களில் இடம்பெறவுள்ளது. Read the rest of this entry »
தீர்த்தோற்சவம் 2015
26-12-2015 மார்கழி 10ம் நாள் சனிக்கிழமை தீர்த்தோற்சவம் காலை 7.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி விஷேடபூசை ,ஸ்தம்பபூசை, வசந்தமண்டப பூசை , என்பன இடம்பெற்று ஆலய தீர்த்தகேணியில் மணியளவில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது . மாலை திருவூஞ்சல் இடம்பெற்று தொடர்ந்து கொடியிறக்கம் சண்டேச்வர் உற்சவம் என்பன இடம்பெற்றது .
திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.
தேர்த்திருவிழா- 2015
25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இடம்பெற்றது . காலை 7.00மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி 9.00 மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று அம்பாள் 10.30 மணியளவில் தேரில்எழுந்தருளி திருவீதியுலா வந்தருளினார் . அம்பாளுடைய தேர்த்திருவிழாவில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர் .
திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.
மஹோற்சவ விஞ்ஞாபனம் -2015
அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் மன்மதவருஷம் ,மார்கழி 1 ம் நாள் வியாழக்கிழமை [17-12-2015] கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துநாட்கள் இடம்பெற்று மார்கழி திருவாதிரை க்கு தீர்த்தத்திருவிழாவும் ,மாலை கொடியிறக்கத்துடன் நிறைவு பெறுகிறது .