திருப்பணி -முன்பக்க மதில்

  1. 27-02-2016  வெளியிடப்பட்டசெய்தி  அம்பாள ஆலய வாசலின் தெற்கு  பக்கமதில் வேலைகள் தை மாதம் அத்திபாரமிடப்பட்டு  வேலைகள் நடைபெற்றுவருகின்றது இவ் மதிலும் வடக்கு பக்கமாக அமைக்கபட்டுவரும் மதில் போலவே  சிற்பவரிவேலைப்பாடுடையதாக அமைக்கப்படவுள்ளது .    இத்திருப்பணிக்கு அடியவர்கள்  நிதி, கட்டிட பொருட்கள் [சீமெந்து ,கருங்கல்சல்லி மணல் ,கம்பி ] ஆகியவற்றைக் வழங்க  விரும்பினால் ஆலய அலுவலகத்தில் மட்டும்  செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
    Continue reading “திருப்பணி -முன்பக்க மதில்”

5ம் பங்குனித்திங்கள் விழா

5ம் பங்குனித்திங்கள் விழா மிக சிறப்பாக இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாளை வழிபடுவதற்காக ஆலயத்தில் கூடியிருந்தனர் புனிததீர்த்தத்தில் நீராடி பொங்கலிட்டு படைத்து அம்பாளை மனமுருகி வேண்டி வழிபட்டு சென்றனர் .

திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.

Continue reading “5ம் பங்குனித்திங்கள் விழா”

4ம் பங்குனித்திங்கள் பொங்கல் விழா

4ம் பங்குனித்திங்கள் பொங்கல் விழா நேற்றையதினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் அம்பாளை தரிசிப்பதற்காக ஆலயவளாகத்திலேகூடி பொங்கலிட்டும் நேர்த்திகளை நிறைவேற்றியும் அம்பாளை வழிபட்டு சென்றனர் .அடியவர்களின் தாக சாந்தியை தீர்க்கும்முகமாக ஆலய சுற்றாடலிலும் வரும்வீதி களிலும் பத்துக்கு மேற்பட்ட தாக சாந்தி நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன் ஆலயத்தின் கிழக்கு,தெற்கு ,மேற்கு பக்கங்களில் உள்ள அன்னதான மடங்களில் அன்னதானமும் வழங்கபட்டது .

திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.

Continue reading “4ம் பங்குனித்திங்கள் பொங்கல் விழா”