திருப்பணி -முன்பக்க மதில்

27-02-2016  வெளியிடப்பட்டசெய்தி  அம்பாள ஆலய வாசலின் தெற்கு  பக்கமதில் வேலைகள் தை மாதம் அத்திபாரமிடப்பட்டு  வேலைகள் நடைபெற்றுவருகின்றது இவ் மதிலும் வடக்கு பக்கமாக அமைக்கபட்டுவரும் மதில் போலவே  சிற்பவரிவேலைப்பாடுடையதாக அமைக்கப்படவுள்ளது .    இத்திருப்பணிக்கு அடியவர்கள்  நிதி, கட்டிட பொருட்கள் [சீமெந்து ,கருங்கல்சல்லி மணல் ,கம்பி ] ஆகியவற்றைக் வழங்க  விரும்பினால் ஆலய அலுவலகத்தில் மட்டும்  செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

5ம் பங்குனித்திங்கள் விழா

5ம் பங்குனித்திங்கள் விழா மிக சிறப்பாக இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாளை வழிபடுவதற்காக ஆலயத்தில் கூடியிருந்தனர் புனிததீர்த்தத்தில் நீராடி பொங்கலிட்டு படைத்து அம்பாளை மனமுருகி வேண்டி வழிபட்டு சென்றனர் . திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.

4ம் பங்குனித்திங்கள் பொங்கல் விழா

4ம் பங்குனித்திங்கள் பொங்கல் விழா நேற்றையதினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் அம்பாளை தரிசிப்பதற்காக ஆலயவளாகத்திலேகூடி பொங்கலிட்டும் நேர்த்திகளை நிறைவேற்றியும் அம்பாளை வழிபட்டு சென்றனர் .அடியவர்களின் தாக சாந்தியை தீர்க்கும்முகமாக ஆலய சுற்றாடலிலும் வரும்வீதி களிலும் பத்துக்கு மேற்பட்ட தாக சாந்தி நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன் ஆலயத்தின் கிழக்கு,தெற்கு ,மேற்கு பக்கங்களில் உள்ள அன்னதான மடங்களில் அன்னதானமும் வழங்கபட்டது ….

3ம் பங்குனித்திங்கள் விழா

3ம் பங்குனித்திங்கள் விழா நேற்று வெகுசிறப்பாக இடம்பெற்றது. குடாநாட்டின் பலபகுதிகளில் இருந்தும் வருகைதந்த பக்தர்கள் அம்பாளுக்கு பொங்கலிட்டும் கரற்பூரசட்டி ,காவடி எடுத்தும், அர்சனைசெயதும் ,அங்கபிரதிஷ்டை செய்தும் வழிபட்டுசென்றதை காணமுடிந்தது. ஆலயத்தின் நான்குபுறங்களிலும் பல நூற்றுக்கணக்கானபொங்கல்கள் அதிகாலை முதலே இடம்பெற்றுவந்ததை அவதானிக்க முடிந்தது. திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.

கண்ணகாம்பிகை அன்னசத்திரம் திறப்பு விழா

‘கண்ணகாம்பிகை அன்னசத்திரம்‘  மண்டப திறப்புவிழா  வைபவரீதியாக 30-03-2015  திங்கள்கிழமை முற்பகல்11.00மணியளவில் தர்மகர்த்தா தலைமையில் இடம்பெற்றது. பிரதமவிருந்தினராககலந்துகொண்ட ரூபினிவரதலிங்கம் (மேலதிகஅரசஅதிபர் ),சிறப்பு விருந்தினர் பொ.சந்திரசேகரம் (விரிவுரையாளர்  யாழ் பல்கலைகழகம் )ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டு நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்துவைக்கபட்டது . படத்தின்மேல் ‘கிளிக்’ செய்வதன் மூலம் முழு அளவில் பார்வையிடமுடியும் . முந்திய  செய்தி அம்பாள் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த ‘கண்ணகாம்பிகை அன்னசத்திரம்‘  மண்டபம் வைபவரீதியாக 30-03-2015 …

2ம் பங்குனித்திங்கள் பொங்கல் விழா

2ம் பங்குனித்திங்கள்விழா சிறப்பாக இடம்பெற்றது குடாநாட்டின் பலபாகங்களிலிருந்தும் வருகைதந்த பக்தர்கள் புனிததீர்த்தத்தில் நீராடி பொங்கலிட்டு வழிபட்டுசென்றனர். அதிகாலை 4.00 மணிமுதலே பக்தர்கள் வருகைதந்தவண்ணம் இருந்ததை காணமுடிந்தது . பகல்திருவிழா அம்பாள் இடபவாகனத்திலும் மாலை திருவிழா மகரவாகனத்திலும் எழுந்தருளி அருட்காட்சியளித்தார் .

ஜய வருஷ பங்குனித்திங்கள் உத்சவம் 2015

வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் பெருவிழா 16-௦3-2015 அன்று ஆரம்பமாகிறது. பங்குனித்திங்கள் என்றதும் இலங்கை வாழ் சைவமக்கள் மனதில் பன்றித்தலைச்சி  அம்மன் கோவிலும் அங்கு இடம்பெறும் பெருமளவான பொங்கலும் தான் நினைவிட்குவரும் என்று கூறுவார்கள் .இத்தகைய சிறப்புமிக்க அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் காலத்தில்  பக்தர்கள் சர்வரோக நிவாரணியாக விளங்கும் புனித தீர்த்தத்தில் நீராடி பூஜை,அபிஷேக ஆராதனைகளினை வழிபட்டும்,பொங்கலிட்டும் அவற்றினை…

நிர்வாகம்

யாழ் குடாநாட்டில் தென்மராட்சிப்பகுதியில் வீற்றிருந்து சர்வலோகமும் தன்அருளை வழங்கிக் கொண்டிருக்கும் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயம் தொடர்பான  விடயங்களை ஆலய நிர்வாகம் இவ் இணையத்தளம் ஊடாக உலகமெல்லாம் பரந்து வாழும் அம்பாள் அடியவர்களுக்கு அறியப்படுத்துகிறது. இவ் இணையத்தளம் ஊடாக அடியார்கள் அம்பாள் ஆலயத்தி்ன் வரலாறு பூஜைகள் உற்சவங்கள் திருப்பணிகள் என்பவற்றை அறியமுடியும் இத்தளம் நிர்வாகத்தி்ன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றது. ஆலயத்தில் உற்சவங்களும், திருப்பணிகளும்…