ஜய வருஷ மகோற்சவவிஞ்ஞாபனம் 27.12.2014 – 05.01.2015

வரலாற்று சிறப்பு மிக்க மட்டுவில் பன்றித்தலைச்சிஅம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஜய வருஷம் மார்கழி மாதம் 12 ம் நாள் 27-12-2014  சனிக்கிழமைகொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் இடம்பெறுகிறது மார்கழி மாதம் 20ம் நாள் 04-01-2015 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள்  மார்கழி 21 ம் நாள் திருவாதிரை 05-01-2015 திங்கள்கிழமை அன்று தீர்த்தம் இடம்பெற்று  மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடைகிறது . அம்பாள் அடியவர்கள் உட்சவகாலங்களில் ஆசாரசீலராக வருகைதந்து உற்சவங்களில் பங்குபற்றி அம்பாளின் அருளை பெற்றுய்வீர்களாக .

உற்சவகால விபரம்

கொடியேற்றம் – 27-12-2014 சனிக்கிழமை  காலை 7.00 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட கிரியைகள் இடம்பெற்று 11.00 மணிக்குகொடியேற்றம் இடம்பெறும் . மாலை யாகாரம்பம் 4.00 மணி.

தேர்த்திருவிழா  04-01-2015 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட கிரியைகள் இடம்பெற்று 10.15 மணியளவில் அம்பாள் தேரில் ஆரோகணித்து அருட்காட்சியளிப்பார்.

தீர்த்ததிருவிழா 05-01-2015 திங்கள்கிழமை காலை  7.00 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட கிரியைகள் இடம்பெற்று 10.00 மணியளவில் ஆலய தீர்த்த கேணியில் தீர்த்தமாடி அருள்புரிவார் .

ஏனைய நாட்களில் காலைதிருவிழா 9.00 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும்

மாலைதிருவிழா  5.00 மணிக்கு  அபிஷேகத்துடன் ஆரம்பமாகும்.



  • ஆலயத்தில் உற்சவங்களும், திருப்பணிகளும் சிறப்பாக இடம்பெற்றுவருகி்ன்றன. அடியார்களாகிய தாங்கள் அம்பாளி்ன் திருப்பணி கைங்கரியங்களுக்காகவோ, உற்சவங்களுக்காகவோ நிதி, பொருள் ஆகியவற்றைக் கையளிக்க விரும்பினால் ஆலய அலுவலகத்தில் செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை.

 

 

DSC04994 copy

தீர்த்தஉத்சவம்

கொடியேற்றத்திருவிழாவின் பத்தாம்நாளன 05-01-2015  திங்கள்கிழமை காலை  ஆலய புனிததீர்த்தகேணியில் தீர்த்தஉத்சவம் இடம்பெற்றது. மாலை திருவூஞ்சல்,கொடியிறக்கம் ,அம்பாள் திருவீதியுலா,சண்டேஸ்வரஉத்சவம் ,ஆச்சாரியஉத்சவம் என்பன இடம்பெற்றது.

படத்தின் மேல் அழுத்தவும் (கிளிக்)செய்வதன் மூலம் படங்களை முழுஅளவில் பார்வையிடலாம்

 

தேர்த்திருவிழா 04-01-2015 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

 

 

 

8ம் திருவிழா

பகல் மகரவாகனம் மதியம் வேட்டைத்திருவிழா இரவு சப்பரம்

 

6ம்,7ம் திருவிழா காட்சிகள்.

 

no images were found

 02-01-2015  வெள்ளிக்கிழமை புனரமைக்கபட்ட 

தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றது

அம்பாள் ஆலய தேர் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த போதும் மேல்பகுதி நிறைவு செய்யப்படவில்லை இவ்வருடம் அவ்வேலைகள் நிறைவு செய்யப்பட்டு ,திருத்த வேலைகள் செய்து புனருத்தாரண வெள்ளோட்டம்விடப்பட்டது .

DSC04757 copy

 

5ம்திருவிழா திருமஞச திருவிழா

no images were found

 

2ம்,3ம்,4ம் திருவிழாக்கள்

கொடியேற்றம் – 27-12-2014 சனிக்கிழமைஇடம்பெற்றது

 

 

no images were found

 

திருப்பணி – அன்னதான மண்டபம்

யாழ்பாணத்தின் பிரசித்தி பெற்ற பொங்கல்தலமாக விளங்குகின்ற அம்பாள் ஆலயத்தில் தனவந்தர்களாலும், தருமகொடையாளர்களாலும் அன்னதானமண்டபங்களும் நீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டு தாகசாந்தி நிலையங்களாக செயட்பட்டு வந்தமை யாவரும் அறிந்ததே அவை 2000 ம்ஆண்டு இடம்பெற்ற யுத்தனர்த்தம் காரணமாக சேதமடைந்தும் ,முற்றாக அழிவடைந்தும் போயுள்ளது தற்போது ஒரு சில மண்டபங்களே இயங்கி வருகிறது எனினும் அவை போதுமானதாக காணப்படவில்லை.எனவே அக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு புதிய அன்னதான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கான நிதியுதவியினை அம்பாள் அடியவர் ஒருவர் வழங்க ஆலய நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மண்டபம் 135 அடி நீளமும் 30அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.

உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.DSC04463 copy DSC04476 copy 10642850_445003238972758_1079181390_o