மன்மதவருஷ பங்குனித்திங்கள் உத்சவம் 2016
வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் பெருவிழா 14-௦3-2016 அன்று ஆரம்பமாகிறது. பங்குனித்திங்கள் என்றதும் இலங்கை வாழ் சைவமக்கள் மனதில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலும் அங்கு இடம்பெறும் பெருமளவான பொங்கலும் தான் நினைவிட்குவரும் என்று கூறுவார்கள் .இத்தகைய சிறப்புமிக்க அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் காலத்தில் பக்தர்கள் சர்வரோக நிவாரணியாக விளங்கும் புனித தீர்த்தத்தில் நீராடி பூஜை,அபிஷேக ஆராதனைகளினை வழிபட்டும்,பொங்கலிட்டும் அவற்றினை தாமே அம்பாளுக்கு படையலிட்டு வழிபட்டும் ,கற்பூரச்சட்டி ,கண்பானை, பாற்செம்பு, காவடி எடுத்தும்,அங்கபிரதட்ஷனம் செய்தும்,விரதமிருந்தும் தமது நேர்த்திகளை பரிபூரணமாக நிறைவேற்றி அம்பாளை வேண்டி வழிபட்டு செல்வர் . இவ்வாறானதொரு நீண்ட வழிபாட்டு பாரம்பரியம் கொண்ட அம்பாள் ஆலயத்தில் மன்மதவருஷ பங்குனித்திங்கள் உற்சவம் பின்வரும் தினங்களில் இடம்பெறவுள்ளது. Continue reading “மன்மதவருஷ பங்குனித்திங்கள் உத்சவம் 2016”