5ம் பங்குனித்திங்கள் விழா மிக சிறப்பாக இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாளை வழிபடுவதற்காக ஆலயத்தில் கூடியிருந்தனர் புனிததீர்த்தத்தில் நீராடி பொங்கலிட்டு படைத்து அம்பாளை மனமுருகி வேண்டி வழிபட்டு சென்றனர் .
4ம் பங்குனித்திங்கள் பொங்கல் விழா நேற்றையதினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் அம்பாளை தரிசிப்பதற்காக ஆலயவளாகத்திலேகூடி பொங்கலிட்டும் நேர்த்திகளை நிறைவேற்றியும் அம்பாளை வழிபட்டு சென்றனர் .அடியவர்களின் தாக சாந்தியை தீர்க்கும்முகமாக ஆலய சுற்றாடலிலும் வரும்வீதி களிலும் பத்துக்கு மேற்பட்ட தாக சாந்தி நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன் ஆலயத்தின் கிழக்கு,தெற்கு ,மேற்கு பக்கங்களில் உள்ள அன்னதான மடங்களில் அன்னதானமும் வழங்கபட்டது .