ஆலய புனரமைப்பு – பாலஸ்தாபனம்
மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலய பாலஸ்தாபனம் கடந்த 11-09-2023 திங்கள்கிழமை இடம்பெற்றது. அம்பாள் ஆலயத்தில் கடந்த 2007 ம் ஆண்டு இடம்பெற்ற மகாகும்பாபிசேகத்திற்கு பின்னர் தற்போது அன்னை ஆலயத்தில் பாலஸ்தாபனம் நிகழப்பெற்றுள்ள நிலையில் ஸ்நபன மண்டபம், தம்ப மண்டபம்,வசந்தமண்டபம் உள்ளிட்ட மண்டப அமைப்பு திருப்பணிவேலைகளும் ஏனைய புனரமைப்பு வேலைகளும் நடைபெற்று வருகின்றது .
ஆலயத்தின் பெயரால் திருப்பணி / பூசை என எந்தவோரு நிதி, பொருள் சேகரிப்பிற்கும் உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ எவருக்கும் அனுமதிவழங்கபடவில்லை.
அன்னையின் ஆலய திருப்பணிவேலைகளுக்கு பங்களிப்பு செய்ய விரும்புவோர் நேரடியாக ஆலய அலுவலகத்தில் /ஆலய திருப்பணி உண்டியல் என்பவற்றினூடாக மட்டுமே வழங்கமுடியும்.
தர்மகர்த்தா
சிவ. பஞ்சாட்சரம்
021 373 5259