மன்மதவருஷ பங்குனித்திங்கள் உத்சவம் 2016
வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் பெருவிழா 14-௦3-2016 அன்று ஆரம்பமாகிறது. பங்குனித்திங்கள் என்றதும் இலங்கை வாழ் சைவமக்கள் மனதில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலும் அங்கு இடம்பெறும் பெருமளவான பொங்கலும் தான் நினைவிட்குவரும் என்று கூறுவார்கள் .இத்தகைய சிறப்புமிக்க அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் காலத்தில் பக்தர்கள் சர்வரோக நிவாரணியாக விளங்கும் புனித தீர்த்தத்தில் நீராடி பூஜை,அபிஷேக ஆராதனைகளினை வழிபட்டும்,பொங்கலிட்டும் அவற்றினை தாமே அம்பாளுக்கு படையலிட்டு வழிபட்டும் ,கற்பூரச்சட்டி ,கண்பானை, பாற்செம்பு, காவடி எடுத்தும்,அங்கபிரதட்ஷனம் செய்தும்,விரதமிருந்தும் தமது நேர்த்திகளை பரிபூரணமாக நிறைவேற்றி அம்பாளை வேண்டி வழிபட்டு செல்வர் . இவ்வாறானதொரு நீண்ட வழிபாட்டு பாரம்பரியம் கொண்ட அம்பாள் ஆலயத்தில் மன்மதவருஷ பங்குனித்திங்கள் உற்சவம் பின்வரும் தினங்களில் இடம்பெறவுள்ளது.
- மன்மதவருஷம் பங்குனி 01 [14.03.2015] முதலாம் பங்குனித்திங்கள்
- மன்மதவருஷம் பங்குனி o8 [21.03.2016 ]இரண்டாம் பங்குனித்திங்கள்
- மன்மதவருஷம் பங்குனி15 [28.03.2016]மூன்றாம் பங்குனித்திங்கள்
- மன்மதவருஷம் பங்குனி22 [04.04.2016]நான்காம் பங்குனித்திங்கள்
- மன்மதவருஷம் பங்குனி29 [11.04.2016] ஐந்தாம் பங்குனித்திங்கள்
பங்குனித்திங்கள் உற்சவமானது ஆறுகால பூஜைகளுடன் காலை, மாலை அபிஷேகம் அம்பாள் திருவீதியுலா என்பனவற்றுடன் பக்தி பூர்வமாக இடம்பெறும்.
பக்தர்கள் காலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் .–
அம்பாள் ஆலயத்தில் பூஜைகளும் உற்ஷவங்களும் திருப்பணிகளும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.இதன்பொருட்டு நிதி,பொருள் சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.எனவே அடியவர்கள் ஆலய அலுவலகத்தில் மட்டும் கையளித்து பற்றுசீட்டினைப் பெற்றுக் கொள்ளும்படி கேட்டு கொள்கிறோம்.