திருப்பணி – அன்னதான மண்டபம்
யாழ்பாணத்தின் பிரசித்தி பெற்ற பொங்கல்தலமாக விளங்குகின்ற அம்பாள் ஆலயத்தில் தனவந்தர்களாலும், தருமகொடையாளர்களாலும் அன்னதானமண்டபங்களும் நீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டு தாகசாந்தி நிலையங்களாக செயட்பட்டு வந்தமை யாவரும் அறிந்ததே அவை 2000 ம்ஆண்டு இடம்பெற்ற யுத்தனர்த்தம் காரணமாக சேதமடைந்தும் ,முற்றாக அழிவடைந்தும் போயுள்ளது தற்போது ஒரு சில மண்டபங்களே இயங்கி வருகிறது எனினும் அவை போதுமானதாக காணப்படவில்லை.எனவே அக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு புதிய அன்னதான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கான நிதியுதவியினை அம்பாள் அடியவர் ஒருவர் வழங்க ஆலய நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மண்டபம் 135 அடி நீளமும் 30அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.
உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.