அறிவித்தல்


தென்மராட்சி பிரதேச செயலகத்தில் 18.03.2020 புதன்கிழமை இடம்பெற்ற விசேட கூட்டத் தீர்மானத்தின் படி நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக பங்குனித் திங்கள் உற்சவத்தில் பக்தர்கள் வருகை தருவது.நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுதல் என்பவற்றை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.தமது அனுஷ்டானங்களை வீட்டிலிருந்தவாறே கடைப்பிடிக்குமாறு கோருகின்றோம்.எனவே பக்தர்கள் நோய்த் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்வதுடன் விரைவில் உலகமக்கள் அனைவருக்கும் நோய்த் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டு வழமையான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டுமென அம்பாளை பிரார்த்திக்கின்றோம்.
சிவ-பஞ்சாட்சரம்
தர்மகர்த்தா
பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் கோவில்,
மட்டுவில் வடக்கு,
சாவகச்சேரி.

Author: webadmin

Leave a Reply