பங்குனித்திங்கள் பொங்கல் – 2024

வரலாற்று சிறப்புமிக்க பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலய வருடாந்த பங்குனித்திங்கள் பொங்கல் இவ்வருடம் 18-03-2024,25-03-2024,01-4-2024,08-04-2024ஆகிய நான்கு திங்கள்கிழமைகளில் இடம்பெறவுள்ளது .

எனினும் அம்பாள் ஆலயம் கடந்த 11-09-2023 திங்கள்கிழமை அன்று பாலஸ்த்தாபனம் நிகழப்பெற்று ஆலய அபிஷேகமண்டபம், தம்பமண்டபம், வசந்தமண்டபம் உள்ளிட்ட திருப்பணிவேலைகள் நடைபெற்று வருகிறது.

எனவே இக்காலப்பகுதியில் திருவிழா(திருவீதியுலா) இடம்பெறமாட்ட்து, ஆயினும் பங்குனித்திங்கள் கிழமைகளில் பூசைவழிபாடுகள் அதிகாலை 5.00மணிக்கு உஷத்காலப் பூசையுடன் ஆரம்பமாகி காலை,மாலை அபிஷேகம் விஷேடபூசை, பொங்கல் படையல், அர்ச்சனை என்பன வழமைபோன்று இடம்பெற்று இரவு 9.00 மணிக்கு அர்த்தசாமப்பூசையுடன் பங்குனித்திங்கள் பொங்கல் வழிபாடுகள்நிறைவு பெறும் .

பக்தர்கள் புனித தீர்த்தக்கேணியில் நீராடி விரதமிருந்து பொங்கல், படையல், அர்ச்சனை உள்ளிட்ட தமது நேர்த்திகள், வழிபாடுகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

ஆலயத்தின் பெயரால் திருப்பணி / பூசை என எந்தவோரு நிதி, பொருள் சேகரிப்பிற்கும் உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ எவருக்கும் அனுமதிவழங்கபடவில்லை.

அன்னையின் ஆலய திருப்பணிவேலைகளுக்கு பங்களிப்பு செய்ய விரும்புவோர் நேரடியாக ஆலய அலுவலகத்தில் /ஆலய திருப்பணி உண்டியலில் மட்டுமே வழங்கமுடியும்.

தர்மகர்த்தா
தொலைபேசி இலக்ககம் : 0213735259

 

Author: webadmin

Leave a Reply