நிர்வாகம்

யாழ் குடாநாட்டில் தென்மராட்சிப்பகுதியில் வீற்றிருந்து சர்வலோகமும் தன்அருளை வழங்கிக் கொண்டிருக்கும் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயம் தொடர்பான  விடயங்களை ஆலய நிர்வாகம் இவ் இணையத்தளம் ஊடாக உலகமெல்லாம் பரந்து வாழும் அம்பாள் அடியவர்களுக்கு அறியப்படுத்துகிறது.

இவ் இணையத்தளம் ஊடாக அடியார்கள் அம்பாள் ஆலயத்தி்ன் வரலாறு பூஜைகள் உற்சவங்கள் திருப்பணிகள் என்பவற்றை அறியமுடியும் இத்தளம் நிர்வாகத்தி்ன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றது.

  • ஆலயத்தில் உற்சவங்களும், திருப்பணிகளும் சிறப்பாக இடம்பெற்றுவருகி்ன்றன. அடியார்களாகிய தாங்கள் அம்பாளி்ன் திருப்பணி கைங்கரியங்களுக்காகவோ, உற்சவங்களுக்காகவோ நிதி, பொருள் ஆகியவற்றைக் கையளிக்க விரும்பினால் ஆலய அலுவலகத்தில் செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை. DSC07357


Author: webadmin

Leave a Reply