வரலாற்று சிறப்பு மிக்க மட்டுவில் பன்றித்தலைச்சிஅம்மன் ஆலய வருடாந்த மகோத்சவம் எதிர்வரும் ஜய வருஷம் மார்கழி மாதம்  ம் நாள் 27-12-2014  சனிக்கிழமைகொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் இடம்பெறுகிறது ம் நாள் 04-01-2015 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள்  மார்கழி திருவாதிரை 05-01-2015 திங்கள்கிழமை அன்று தீர்த்தம் இடம்பெற்று  மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடைகிறது . அம்பாள் அடியவர்கள் உட்சவகாலங்களில் ஆசாரசீலராக வருகைதந்து உற்சவங்களில் பங்குபற்றி அம்பாளின் அருளை பெற்றுய்வீர்களாக .

உற்சவகால விபரம்

கொடியேற்றம் – 27-12-2014 சனிக்கிழமை  காலை 7.00 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட கிரியைகள் இடம்பெற்று மணிக்குகொடியேற்றம் இடம்பெறும் . மாலை யாகாரம்பம் 4.00 மணி.

தேர்த்திருவிழா  04-01-2015 ஞாயிற்றுக்கிழமை காலை  மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட கிரியைகள் இடம்பெற்று  மணியளவில் அம்பாள் தேரில் ஆரோகணித்து அருட்காட்சியளிப்பார்.

தீர்த்ததிருவிழா 05-01-2015 திங்கள்கிழமை காலை  7.00 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட கிரியைகள் இடம்பெற்று 10.00 மணியளவில் ஆலய தீர்த்த கேணியில் தீர்த்தமாடி அருள்புரிவார் .

ஏனைய நாட்களில் காலை9.00 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும்

மாலை 5.00 மணிக்கு  அபிஷேகத்துடன் ஆரம்பமாகும்.



 

  • ஆலயத்தில் உற்சவங்களும், திருப்பணிகளும் சிறப்பாக இடம்பெற்றுவருகி்ன்றன. அடியார்களாகிய தாங்கள் அம்பாளி்ன் திருப்பணி கைங்கரியங்களுக்காகவோ, உற்சவங்களுக்காகவோ நிதி, பொருள் ஆகியவற்றைக் கையளிக்க விரும்பினால் ஆலய அலுவலகத்தில் செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை