ஈழவளநாட்டிலே வடபாகத்தே குடாநாட்டிலே் தென்மராட்சிப் பகுதியில்மட்டுவில் கிராமத்தில்”பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் “எனும் புண்ணிய ஸேத்திரம் அமைந்துள்ளது. தொன்று தொட்டு விளங்கும் இந்து சமய வழிபாட்டிலே தாய்த் தெய்வ வழிபாடானது பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்பாள் ஆலயத்திலே சிறப்புற்று விளங்குகின்றது. இவ் ஆலயம் பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

தற்போது நாம் காணும் இடத்தில்  உள்ள ஆலயம் கி.பி 1750 இல் SAM_0003 (1)திரு.நாகர் கதிர்காமர் என்பவரால் வைரக்கற்களைக் கொண்டு கட்டப்பெற்றதாகும்.மூ லஸ்தானத்தின் மேற்குப்புற வைரக்கற்சுவரில் 1750 என ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அமைந்திருந்த ஆலய அமைப்பிற்கான அடையாளங்களும்  காணப்படுகின்றன.

அதாவது பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் கோவில் தற்போது  உள்ள இடத்தில் முன்னர் அமைந்திருக்கவில்லை. பழைய கோவில் தற்போதுள்ள கோவிலுக்கு வடக்குப் பக்கமாக இருந்திருக்கவேண்டும் அதற்கான செங்கற்கட்டிட இடிபாடுகள் தற்போதுள்ள ஆலயத்தின் வடக்குப் பக்கத்தில் இன்றும் காணப்படுகின்றன. அத்துடன் பிள்ளையார், கந்தசாமியார் கோவில்களும் மேற்குப்புறத்தே  அமைந்திருந்தமைக்கான அடையாளங்களும் காணப்படுகின்றன.

இவ் ஆலயத்திற்கு‘பன்றித்தலைச்சி‘ எனும் பெயர் ஏற்பட்டதைப்பற்றிக் கர்ண பரம்பரைக்கதை ஒன்று கூறப்படுகின்றது. பண்டைக்காலத்திலே வள்ளுவ குலத்தைச்சேர்ந்த பக்தனொருவன் ஆலயத்திற்கு கிழக்கே உள்ள வடலிக்கூடலில் மாடு ஒன்றைக் கொன்றுவிட்டான். அச்சம்பவம் ஊர் மக்களுக்குத் தெரிய வந்தது. தன் தவறை உணரந்த பக்தன் அம்பாளை வேண்டித் தொழுதான். மறுநாள் ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் மாட்டின் தலை புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டது.அங்கு பன்றித் தலையே காணப்பட்டது. அனைவரும் அம்பாளின் அற்புதத்தைக்கண்டு பேரானந்தமடைந்தனர். அன்றிலிருந்து அம்பாள் பன்றித்தலைச்சி அம்மன் என்று பக்தர்களால்  வணங்கப்பட்டு வருகின்றாள்.  ஆரம்ப காலங்களில் அன்னையின் ஆலயத்தில் நிர்வாகிகளே பூஜைகளை மேற்கொண்டு வந்தனர்.1900ஆம் ஆண்டிலிருந்து பிராமணக்குருமார்  பூஜைகளை ஆற்றுகின்றனர்.

1939 ஆம்ஆண்டிற்கு முன்பு திங்கட்கிழமைகளில் அம்பாளுக்கு இரண்டு நேரப்பூஜையும் மற்றைய நாட்களில் அபிசேகமும் விளக்கு வைத்தலும் நடைபெற்று வந்தது. 1939இல் இரண்டு கால நித்திய பூஜை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் ஆசனத்தில் கும்பம் வைத்து முகம் சாத்தி அம்மனுக்கு  பூஜை நடைபெற்று வந்தது. தர்மகர்த்தா திரு.சி.சிவகுரு அவர்கள் 1946 ஆம் அண்டில் ஜப்பசி மாதம் உத்தரட்டாதி நட்சரத்தில் கண்ணகை அம்மன் தாமிரவிக்கிரகம் பிரதிஸ்டை செய்து மகாகும்பாபிஸேகத்தை செய்வித்தார். அதே வருடமே மார்கழித் திருவெம்பாவை காலத்தில் வருடாந்த மகோற்வசத்தினையும் முதன் முதலாக ஆரம்பித்தார். 1950 இல் நான்கு நேர பூஜை இடம்பெற்று  1952இல்இருந்துஆறுகாலப் பூஜைஇடம் பெறுகிறது.

 

பழமை வாய்ந்த கட்டிடங்கள் என்பதனால் மூலஸ்தானத்தினை புனரமைப்பதற்காகவும் பல்வேறு திருப்பணிகளை மெற்கொள்ளும் பொருட்டும் திரு.சின்னப்பா சிவகுரு அவர்கள் 1989 இல் பாலஸ்தாபனம் செய்வித்தார். மூலஸ்தானம் புனரமைக்கப்பட்டும் நீராவி மண்டபம் அமைக்கப்பட்டும் ஸ்துாபி வைக்கப்பட்டும்                                                               {இதுவரைகாலமும்செப்பினால்வேயப்பட்ட4குடில்காணப்பட்டமை  நோக்குதற்குரியது}பரிவார மூர்த்திகட்கான ஆலயங்கள் அமைக்கப்பட்டும் 1991 இல் மகா கும்பாபிசேகம் இடம்பெற்றது. 1993 இல் அம்பாளுக்கு சித்திரத்தேர் அமைக்கும் திருப்பணிஆரம்பிக்கப்பட்டது. 1999 இல் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றது. இக்காலப்பகுதியிலே வெள்ளைக்கற்களைக்  கொண்டு தேர்த்தரிப்பிடம் அமைக்கப்பட்டது.2008 இல் இராஜ கோபரத்திற்கான அத்திபாரம் இடப்பட்டு வெள்ளைக் கற்களைக் கொண்டு .இராஜ கோபுர கீழ்த்தளம் அமைக்கப்பட்டு 2012 இல் திரிதள இராஜகோபுர கும்பாபிசேகம் இடம்பெற்றது. 2012இன் நடுப்பகுதியில் மணிமண்டப திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு2013இல்  ஒருபகுதி வேலைகள் நிறைவுற்றுள்ளதுDSC07357மட்டுவில் பன்றித்தலைச்சி  அம்பாள் ஆலயத்திலே பங்குனித்திங்கள் உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக  இடம்பெற்று வருகின்றது. ‘பால்குண மாதம்’ என்று  கூறப்படும் பங்குனி மாதத்தில் சாக்தவழிபாட்டின் சிறப்பையும் முறைகளையும் எடுத்து கூறும் சாக்த தந்திரங்கள் கண்ணகா  பரமேஸ்வரிக்குரிய தியான                                            சுலோகங்களையும், பூஜை முறைகளையும். பிரதிஸ்டை முறைகளையும் மிக சிறப்பாக எடுத்து கூறுகின்றன. மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாளுக்குரிய மிக சிறப்பானபங்குனித் திங்கள் பொங்கல் நிகழ்வுகளும் பூசைக் கிரமங்களும்இவற்றுடன்  தொடர்பு படுவதை உற்று நோக்கியறியலாம்.

மட்டுவிலில் கோவில் கொண்ட அம்மனை வேண்டித் தீவின் பல பாகத்திலுமிருந்து மக்கள் தமது நேர்த்திக் கடன்களை செய்வதற்காகவும் தரிசிப்பதற்காகவும் பங்குனித் திங்கள் உற்சவ காலத்தில் ஒன்று கூடுவர். அம்பாளின் ஆலயத்திலே உள்ள பழமை வாய்ந்த தீர்த்த கேணியிலே நீராடி புனித நீரினை எடுத்து பொங்கல் செய்து ஆலய முன்றலிலே அம்பாளை நினைத்து தாமே நிவேதித்து  வணங்கும் சிறப்பு காணப்படுகிறது.

அடியவர்கள் பல பகுதிகளிலுமிருந்தும் காவடி எடுத்து அம்பாளின் சந்நிதியில் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர்.மூர்த்திப் பெருமையும் ,பொங்கல் தலமாகவும் , தீர்த்த விசேடமும் ஒருங்கே அமையப் பெற்ற மட்டுவில் பதி உறைகின்ற கண்ணகைஅம்பாளைஅடியவர்கள் மனம், வாக்கு , காயம், எனும்   மூன்றினாலும் தொழுதுஅனுக்கிரகங்களை பெற வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

DSC02684

DSC02651

 

 

 

DSC02661

 

 

 

 

 

“மூர்த்தி தலம் தீர்த்தம் முறையால் தொடங்கினர்க்கோர்

வார்த்தை சொல்லச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே ” – தாயுமானவர்.